மும்பை அந்தேரி கிழக்கு பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 25 வயதான இளம்பெண் சிருஷ்டி துலி என்பவர் வசித்து வந்தார். இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது சொந்த ஊர் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ஆகும். இவருக்கு டெல்லியை சேர்ந்த ஆதித்யா பண்டிட் என்ற காதலர் இருந்துள்ளார். டெல்லியில் நடந்த பயிற்சியின் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது.
பெண் விமானி சிருஷ்டி துலி கடந்த திங்கட்கிழமை காலை 3 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்த பொவாய் போலீசார், சடலமாக தொங்கிய விமானி சிருஷ்டி துலியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் சிருஷ்டி துலியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது. விமானி சிருஷ்டி துலியின் காதலனான ஆதித்யா பண்டிட் என்பவர் அடிக்கடி இங்கு வந்து தங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இவர், அடிக்கடி சிருஷ்டி துலியை பொதுஇடங்களில் வைத்து அசிங்கப்படுத்தியுள்ளார், அசைவம் சாப்பிடுவதை நிறுத்துமாறு கூறி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
சம்பவத்தன்று ஆதித்யா பண்டிட் சண்டை போட்டு விட்டு டெல்லி சென்றுள்ளார். இதனால், மனஉளைச்சல் அடைந்த சிருஷ்டி துலி அவருக்கு போன் செய்து உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து, டெல்லியில் இருந்து ஆதித்யா பண்டிட், மும்பை திரும்பி பிளாட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு, சிருஷ்டி உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து போலீசார் ஆதித்யா பண்டிட்டை கைது செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
‘செக்யூலர்’ ‘சோஷலிஸ்ட்’ ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் அங்கங்களா?
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் உதயநிதி
அசைவம் சாப்பிடறது குத்தமாய்யா? ஒரு உயிரை செதச்சுட்டயே?