டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் உள்நாட்டு பயணிகளுக்காக பிரத்யேகமான உணவு மெனுவை அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கான இந்த புதிய உணவு மெனு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம், சேவைகளை மேம்படுத்தவும், வேகமாக வளர்ந்து வரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் அதன் ஒட்டுமொத்த சந்தைப் பங்கை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில்,பயணிகளை கவர்வதற்காக அந்த நிறுவனம் எகானமி வகுப்பு பயணிகளுக்கு காலை உணவாக பனீர் காளான் ஆம்லெட், காய்ந்த சீரகக் கிழங்கு வெஜ், பூண்டு தோசைக் கீரை மற்றும் சோளம்,
மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி, மலபார் சிக்கன் கறி மற்றும் மிக்ஸ் வெஜிடபிள் பொரியல் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

பிசினஸ் வகுப்பு உள்நாட்டு பயணிகளுக்கு வெண்ணெய் மற்றும் ஃபிளேக்கி குரோசண்ட், சர்க்கரை இல்லாத டார்க் சாக்லேட் ஓட்மீல் மஃபின்கள், சீஸ் மற்றும் ட்ரஃபிள் ஆயில் துருவிய முட்டை வெங்காயம், கடுகு கிரீம் பூசப்பட்ட சிக்கன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய உணவுகளான ஆலு பரோட்டா , மெதுவடை மற்றும் பொடி இட்லியும் காலை உணவாக பரிமாறப்படும்.
இதைத் தொடர்ந்து மீன் குழம்பு, சிக்கன் செட்டிநாடு, ஆலு பொடிமாஸ் ஆகியன மதிய உணவாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், க்ரில்டு ஸ்லைஸ்டு பெஸ்டோ சிக்கன் சாண்ட்விச் மற்றும் சிக்கன் 65 ஹை டீ வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர்களால் மிகுந்த கவனத்துடன் மெனு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் சுவை மற்றும் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு சுவையான உணவை அனுபவிக்கும் வகையில்,
புதிய மெனு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச விமானங்களின் மெனுவில் விரைவில் மாற்றங்களை கொண்டு வர முயற்சிப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
புதிய உணவு மெனுவை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தி இருப்பது பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
புதுச்சேரி மின் துறை ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!
ரஜினி மகளாக நடிக்க ரூ.10 லட்சம்: ஏமாற்றப்பட்ட இளம் பெண்!