பாலஸ்தீன விடுதலை கோரும் ஹமாஸ் பயங்கரவாத குழு காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது நேற்று காலை திடீர் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து அங்கு போர் பதற்றம் மூண்டுள்ளது.
இதுவரை இரதரப்பிலும் 500க்கும் மேற்பட்டோர் உயிழந்த நிலையில், 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதன் எதிரொலியாக டெல் அவிவ் நகருக்கு வரும் 14-ந்தேதி வரை விமான சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இதுகுறித்து அந்நிறுவனம் இன்று (அக்டோபர் 8) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து வரும் ஏர் இந்தியா விமானங்கள் அக்டோபர் 14, 2023 வரை நிறுத்தி வைக்கப்படும். இந்தக் காலகட்டத்தில் எந்த விமானத்திலும் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு ஏர் இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கும்.
டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வாரந்தோறும் 5 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
INDvsAUS: டக் அவுட் ஆன மார்ஷ்… சாதனை படைத்த விராட் கோலி
இஸ்ரேல் போர்: தங்கம் விலை உயருமா? பின்னணி இதுதான்!