பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 5 ஆம் தேதி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார்.
பின்னர், லுஹ்னு மைதானத்துக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மோடி , பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று (அக்டோபர் 3) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 சிறப்பு மற்றும் 17 தனிச் சிறப்பு பிரிவுகள், 64 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் மொத்தம் 750 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அறுவை சிகிச்சை அரங்குகளுடன் இந்த மருத்துவமனை 247 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இனி ஏர்இந்தியாவில் ஸ்பெஷல் உணவு: ஏன் தெரியுமா?
பெண்கள் ஆசிய கோப்பை டி20: இந்திய அணி வெற்றி!