சாரா டெண்டுல்கரின் புகைப்படத்தை சுப்மன் கில்லுடன் மார்பிங் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது பாலிவுட் வட்டாரங்களில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக Deep Fake முறையில் நடிகைகளின் புகைப்படங்களை ஆபாச முறையில் மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவது வாடிக்கையாகி வருகிறது. முதலில் தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ வெளியானது. தொடர்ந்து நடிகை காத்ரீனாவின் மார்பிங் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரின் போட்டோவும் Deep Fake செய்யப்பட்டுள்ளது .
இவர் தன்னுடைய சகோதரரும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை மார்பிங் செய்து அவர் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் இருப்பது போல இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாக தற்போது இணையவாசிகள் இதுபோல மார்பிங் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாரா டெண்டுல்கர்-சுப்மன் கில் இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற மார்பிங் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
நீலகிரியில் கொட்டும் மழை : மண் சரிவு, உருண்டு விழுந்த பாறைகள்!
‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு 3 பாகங்கள்: இயக்குனரின் அப்டேட்!