6 வயதில்தான் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020, அடிப்படையில் பள்ளிக் கல்வி முதல் உயர்க் கல்வி வரை மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் குழந்தைகளுக்கான கல்வி வயது குறித்து கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், பள்ளிக் கல்வியில் நிலை-Iக்கான மாணவர் சேர்க்கை வயதை 6க்கு மேல் மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்விக்கு முந்தைய மழலையர் கல்வியில் 2 ஆண்டு பட்டயப் படிப்பை வடிவமைத்து நடத்த வேண்டும்.
3 வயதில் பிரி-பிரைமரி வகுப்பில் சேர்க்கலாம், இதையடுத்து 3 ஆண்டுகள் பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி பயில வேண்டும். குழந்தைகளின் அடிப்படை கற்றலை மேம்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
ஸ்டாலின் ஈரோடு வருவதற்குள் சீமான் பரப்புரைக்குத் தடை?
100 கிமீ … வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் மக்னா யானை!