அதானி விவகாரம் : கூடியதும் மக்களவை ஒத்திவைப்பு!

Published On:

| By Kavi

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை கூடியதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு இன்று(நவம்பர் 25) நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி, “நாடாளுமன்ற விவாதத்தில் அதிகமான எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆக்கப்பூர்வமாக நடக்கும் என நம்புகிறேன்.

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவையில் தொடரும் அமளியால் இளம் எம்.பி.க்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகார பசி கொண்டவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். அவர்களை மீண்டும் மீண்டும் மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகின்றனர்” என்று கூறினார்.

இந்நிலையில் 11 மணிக்கு அவை தொடங்கியதும், அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் ஆகியவற்றை குறிப்பிட்டு மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே 12 மணி வரை மக்களவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம்.பிர்லா.

தற்போது, மாநிலங்களவையும் 11.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்… ஷிண்டேவா… பட்னாவிஸா… பாஜகவின் திட்டம் இதுதான்?

போராட்டம் நடத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்… எப்படியோ தாய் வீடு திரும்பிய அஸ்வின்

Comments are closed.