முடிந்தது மாநிலங்களவை முதல் அமர்வு: நேரம் விரயமென அவைத் தலைவர் வருத்தம்!

Published On:

| By Kalai

Rajya Sabha Speaker regrets wasting time

மாநிலங்களவை நேரம் அதிகம் விரையம் செய்யப்பட்டது வருத்தம் அளிப்பதாக கூறி அவையின் முதல் அமர்வை முடித்து வைத்தார் அவைத்தலைவர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது.

பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஜனவரி 2ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து அலுவல் நேரங்கள் நடைபெற்று வந்தது.

இருப்பினும் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமலியில் ஈடுபட்டதால் நாள்தோறும் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையும், இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி மீண்டும் தொடங்கி ஏப்ரல் 6 தேதி வரை நடைபெற உள்ளது.

மாநிலங்களவையில் இன்றைய அலுவல் நேரமும் எதிர்க்கட்சிகளின் கடுமையான அமளி காரணமாக ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழலில் இரண்டாவது முறை மீண்டும் கடும் அமளியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும்(பிப்ரவரி 13) அவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக மாநிலங்களவையை சிறப்பான கூட்டத் தொடராக நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எல்லை மீறிய செயலாலும், நடத்தைகளாலும், உரிய விதிமுறைகளை மீறி செயல்பட்டதாலும்,

அவையின் நேரங்கள் வீணடிக்கப்பட்டதாகவும், பலமுறை ஒத்திவைக்கப்பட்டதாகவும் இப்போதும் அதே நடைமுறை தொடர்வதால் இன்றைய ஒரு நாளும் ஒத்திவைக்கப்படுவதாக அவை தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்தார்.

கலை.ரா

தமிழக சட்டம் ஒழுங்கு: டிடிவி சரமாரி கேள்வி!

பெற்றோருடன் செல்வதாக குருத்திகா விருப்பம்: நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share