Arvind Kejriwal's Interim Bail Petition: Argument in Court!

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர்,  திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரவிந்த கெஜ்ரிவால் தன்னை கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

தற்போது இந்த வழக்கு விசாரணை இன்று (மே 7) உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

அதில், “ஹவாலா மூலம் ரூ.100 கோடி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் மொத்தம் ரூ.1,100 கோடி சம்மந்தப்பட்டு உள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைப்பற்றப்பட்டது ரூ.100 கோடி, அப்படியானால் இந்த ரூ.1100 கோடி எங்கிருந்து வந்தது. புதிய மதுபான கொள்கையால் மதுபான நிறுவனங்கள் அடைந்த லாபமும் இதில் அடங்கும். ” என வாதிட்டார்.

தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணையை தொடங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்த வாதங்களுக்கும், கெஜ்ரிவால் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக அமலாக்கத்துறை தரப்பில் வாதங்களை முழுமையாக முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, நீதிபதி சஞ்சீவ் கண்ணா, கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டால், அவரது அரசு கடமைகளையும் செய்வார். அது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் தானே? என கேள்வி எழுப்பினார்.

மேலும், கெஜ்ரிவாலை விடுவித்தால் அதன் மூலமாக அவர் அரசு வேலைகளில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அரசின் எந்த வேலைகளும் நிறுத்தப்படக் கூடாது என்ற டெல்லி துணைநிலை ஆளுநரின் நிபந்தனையை தவிர்த்து வேறு எந்த ஒரு அரசு கோப்பிலும் கையெழுத்திடப் போவதில்லை என  உறுதி  அளித்தார்.

இருந்தபோதும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி வழக்கிலும் இதே போன்று தான் நடந்தது என கூறினார்கள்.

அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”அது உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பு என்பதால் இவ்வாறு நடந்தது” எனத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “எங்களால் இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றால் இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியும்” என்றனர்.

இதனையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கை மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று இடைக்கால ஜாமீன் கிடைத்துவிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வைரமுத்து – இளையராஜா இடையே போர் : குஷ்பு பளீர் பதில்!

பிரதமர் வேட்பாளர் தேவையா? – ஜாசன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *