aditya l1 launch isro today september 2

ஆதித்யா எல் – 1 விண்ணில் பாய்ந்தது!

இந்தியா டிரெண்டிங்

சூரியனின்  வெளிப்புறத்தை ஆய்வு செய்ய ஆதித்யா 1 விண்கலம் இன்று விண்ணில் பாய்ந்தது. வெற்றிகரமாக இந்த விண்கலம் விண்ணில் பாய்ந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 3 திட்டத்தில் சாதனை படைத்தது. இந்நிலையில் அடுத்த திட்டமாக சூரியனை  பற்றி ஆய்வு செய்வதற்காக ஆதித்யா 1 விண்கலத்தை தயாரித்தது.

இதனை ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று 12.10 மணிக்கு தொடங்கியது. பி.எஸ்.எல்.வி.-சி-57 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் தளத்தில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

1,475 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிமீ தொலைவில் நிலை நிறுத்தப்படுகிறது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தோராயமான தூரம் 15 கோடி கிமீ தூரமாகும். அதன்படி ஆதித்யா 1 நிலை நிறுத்தப்படும் பகுதி பூமி-சூரிய தூரத்தில் 1% மட்டுமே ஆகும்.

சூரியன் ஒரு மாபெரும் வாயுக் கோளாகும், எனவே ஆதித்யா-எல்1 சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ஆதித்யா-எல்1 சூரியனில் இறங்காது அல்லது சூரியனை நெருங்காது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பூமியில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ‘லக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்ற இடத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை நோக்கிய கோணத்தில் நிலை நிறுத்தப்படும்.

இந்த விண்கலத்தில் பொறுத்தப்பட்டுள்ள கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநி்லை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய்ம் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

இந்த விண்கலத்தில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன.

Image

சூரியன் மற்றும் பூமி போன்ற இரண்டு பெரிய கோள்களின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் புள்ளி லக்ராஞ்சியன் பாயிண்ட் என்று அழைக்கப்படுகிறது.

ஆதித்யா எல்-1 விண்கலம் இந்த புள்ளியை அடைவதற்கு 125 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சிங்கப்பூர் எதிர்கொள்ளும் சவால்கள் : உறுதியளித்த தர்மன் சண்முகரத்னம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *