விண்ணில் பாய தயாரானது ஆதித்யா எல் 1!

Published On:

| By Monisha

aditya L1 countdown starts

சூரியனின் ஆய்வுப் பணிக்காக விண்ணில் பாய உள்ள ஆதித்யா எல் 1 விண்கலத்தின் கவுன்டவுன் இன்று (செப்டம்பர் 1) தொடங்கியது.

நிலவிற்கு சந்திரயானை அனுப்பிய சாதனையைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை நாளை விண்ணில் செலுத்த உள்ளது இஸ்ரோ.

சூரியனுக்கு மிக அருகில் சென்று இந்தியாவின் ஆதித்யா விண்கலம் ஆய்வு மேற்கொள்வதன் மூலம், சூரியனைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் இதுவரை அறிந்திடாத பல தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

aditya L1 countdown starts

பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ரேஞ்சே 1 சுற்றுப்பாதையில் ஆதித்யா 1 விண்கலம் நிலை நிறுத்தப்படுவதற்கு 120 நாட்கள் ஆகும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

நாளை ஆதித்யா எல் 1 விண்ணில் பாய்வதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நாளை காலை 11.50 மணிக்கு விண்ணில் பாய உள்ள ஆதித்யா எல் 1 விண்கலத்தின் கவுன்டவுன் இன்று தொடங்கியுள்ளது.

பி.எஸ்.எல்.வி – C57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்ணில் பாய்வதை நேரலையில் மக்கள் காணலாம் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

மோனிஷா

ஜெயிலர் லாபத்தில் ரஜினிக்கு பங்கு கொடுத்தாரா கலாநிதி?

கவுதம சிகாமணி வழக்கு: சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel