சூரியனில் அறிவியல் தரவுகளை சேகரிக்க துவங்கிய ஆதித்யா எல் 1

இந்தியா

சூரியனில் ஆய்வு பணிக்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்க துவங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திராயன் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது. இதனை தொடர்ந்து சூரியனில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி 57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலம் செப்டம்பர் 2-ஆம் தேதி அனுப்பப்பட்டது.

இந்த விண்கலமானது பூமியிலிருந்து 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியான் புள்ளி 1-ஐ சென்றடையும். சூரியன் மற்றும் பூமி போன்ற இரண்டு பெரிய கோள்களின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் புள்ளி லாக்ராஞ்சியான் புள்ளி என்று அழைக்கப்படுகிறது. அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும்.

இதுவரை 4 முறை பூமியின் சுற்றுவட்டப்பாதையை உயர்த்தும் பணி நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனில் அறிவியல் தரவுகளை சேகரிக்க துவங்கியுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆதித்யா-எல்1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது. STEPS கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் உள்ள அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கியுள்ளன. இந்தத் தரவுகள் பூமியைச் சுற்றியுள்ள துகள்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உதவுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

“அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை” – ஜெயக்குமார்

நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப கதையில் ஜெயம் ரவி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *