என்டிடிவி செய்தி சேனலில், கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்கான திறந்தவெளி சலுகை நவம்பர் 22 ஆம் தேதி சந்தாவிற்கு திறக்கப்பட உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இந்த சலுகை டிசம்பர் 5ம் தேதி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் பெரும் பணக்காரரான கெளதம் அதானி, என்டிடிவி நிறுவனத்தின் 29.18 சதவீதம் பங்குகளை கையகப்படுத்தினார்.
அதானியின் பக்கா ஸ்கெட்ச்!
அதானி எண்டர்பிரைசுக்குச் சொந்தமான ஏ.எம்.ஜி.மீடியா நெட்வொர்க்ஸ் லிமிடெட் என்ற துணை நிறுவனம், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி, விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (விசிபிஎல்) 100% பங்குகளை ரூ.113.74 கோடிக்கு வாங்கியது.
கடந்த 2009ம் ஆண்டு விசிபிஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.403.85 கோடியை என்டிடிவி வாங்கி இருந்தது.
வாங்கிய கடனை, எந்த நேரத்திலும் என்டிடிவி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரனாய் ராய், ராதிகா ராய் நிறுவனமான ஆர்ஆர்பிஆர் பங்காக மாற்ற விசிபிஎல் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது என்று அப்போது ஒரு கடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன்படி அதானி குழுமத்தின் வசம் சென்ற விசிபிஎல் நிறுவனம், என்டிடிவியில் 29.18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் பிரனாய் ராய், ராதிகா ராய் ஆகியோரின் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக தன்வசமாக்கும் உரிமையை தேர்வு செய்தது.
இதன் மூலம் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகள் கோடீசுவரரான அதானி குழுமத்தின் வசம் சென்றது. மேலும் முன்னர் போட்ட கடன் ஒப்பந்தத்தின்படி, அதானி குழுமத்திற்கு திறந்தவெளி சலுகை வழங்க வழிவகுத்தது.
செபி கூறுவது என்ன?
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) விதிகளின்படி, ஒரு நிறுவனத்தில் 25% க்கும் அதிகமான பங்குகளைப் பெறும் ஒரு நிறுவனம், இலக்கு நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விலையில் தங்கள் பங்குகளை விற்க அழைக்கும் திறந்தவெளி சலுகையை அறிவிக்கும் உரிமையைப் பெற முடியும்.
திறந்தவெளி சலுகை; அறிவித்த அதானி
மும்பை பங்குச் சந்தையின் தரவுகளின்படி, பொது பங்குதாரர்கள் என்டிடிவி-இல் 38.55% பங்குகளை வைத்துள்ளனர். திறந்தவெளி சலுகையானது இந்த பங்குகளுக்கு பொருந்தும்.
அதன்படி ஒரு என்டிடிவி பங்கின் திறந்தவெளி விலை ரூ.294 ஆக கூறப்பட்டுள்ளது. இது தற்போதைய சந்தையில் உள்ள என்டிடிவியின் பங்கு விலையை விட 20 சதவீதம் குறைவாகும்.
இந்நிலையில் ஒரு பங்கிற்கு ரூ.294 சலுகை விலையில் 1.67 கோடிக்கும் அதிகமான ஈக்விட்டி பங்குகள் சந்தாவிற்கு திறக்கப்பட உள்ளது.
அதாவது புது டெல்லி டெலிவிஷன் லிமிடெட் (NDTV) செய்தி சேனலில் கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்கான திறந்தவெளி சலுகையை நவம்பர் 22 ஆம் தேதி சந்தாவிற்கு திறக்கப்படும் என்று அதானி குழுமம் கடந்த 11ம் தேதி அறிவித்தது.
என்டிடிவி வசப்படுத்தும் அதானி
எந்தவொரு பங்குதாரரும் இந்த திறந்தவெளி விலையில் தங்களுடைய பங்குகளை விற்க மாட்டார்கள்.
அதே சமயம், இந்த திறந்தவெளி வாய்ப்பு வெற்றிகரமாக அமைந்தால், அதானி குழுமம், என்டிடிவியின் 55.18 சதவீத பங்கை தன்வசமாக்கலாம்.
அப்படி நடந்தால் அந்த நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் அதானி குழுமம் வசம் வந்து விடும்.
கிறிஸ்டோபர் ஜெமா
”தென் தமிழகத்தில் சம்பவம் இருக்கு”: எச்சரிக்கும் வெதர்மேன்!
சாகச காட்சியில் விபத்து: பற்றி எரிந்த விமானங்கள்!