Adani shares goes up

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: அதானி பங்குகள் கிடுகிடு உயர்வு!

இந்தியா

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 3) அளித்த தீர்ப்பினை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்கள் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. Adani shares goes up

அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க்’ ஆய்வு நிறுவனம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல்வேறு பங்குச்சந்தை, பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி அறிக்கையை வெளியிட்டது. அதனையடுத்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு குறையத் தொடங்கியது.

மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, அதானி குழும முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கினை விசாரித்து வந்த தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு,

”அதானி குழும முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தேவையில்லை. செபியின் விசாரணை மட்டுமே போதுமானது” என்று இன்று உத்தரவிட்டது.

அதானியின் நிறுவனத்திற்கு ஆதரவான இந்த உத்தரவினை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கிடுகிடுவென மீண்டும் ஏற்றத்தை கண்டுள்ளன.

இந்திய பங்குச்சந்தை யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் இன்று சரிவுடன் தொடங்கியது. எனினும் அதானி குழுமத்தின் கீழ் உள்ள பல நிறுவனங்களின் பங்குகள் 18 சதவீதத்திற்கு மேல் உயர்வை எட்டியுள்ளன.

அதன்படி அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் சோன் லிமிடெட்,

அதானி போர்ட்ஸ், அதானி வில்மர் லிமிடெட் மற்றும் அதானி பவர் லிமிடெட் உள்ளிட்ட அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

மேலும் பங்கு விலைகள் அதிகரித்ததன் காரணமாக, அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் 2023 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.15 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இந்த பரிவர்த்தனைகளுக்கு 1.1% கட்டணம்… யுபிஐ புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தன!

திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்!

Adani shares goes up

+1
0
+1
1
+1
0
+1
2
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *