அதானிக்கு எதிராக செய்தி வெளியிட தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க், அதானி குழுமத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள் பங்குச்சந்தை மோசடிகளில் ஈடுபட்டதாக கடந்த மாதம் மொத்தம் 413 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த ஆய்வறிக்கை அதானி குழுமத்தின் பங்கு முறைகேடுகளை ஆதாரத்துடன் வெளியிட்ட நிலையில் இந்தியாவில் பெரும் சர்ச்சை வெடித்தது.
இதனால் அதானி நிறுவனங்கள் பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
மேலும் கடந்த 4 ஆண்டுகளில் உலகின் 3வது பணக்காரர் என்று குறிப்பிடும் அளவுக்கு இருந்த அதானியின் சொத்து மதிப்பு, ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை மூலம் இரண்டே வாரத்தில் சட்டென சரிந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானியின் மோசடியை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.
இதற்கிடையே அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக செய்தி வெளியிட தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க கோரியும், அவர்கள் வெளியிட்ட அறிக்கையை உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு ஆய்வு செய்யவும், அதானி குழும நிறுவனத்தின் மீதான புகாரை செபி பரிசீலித்து உறுதி செய்த பிறகே செய்தி வெளியிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அதானி குழும விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 10ஆம் தேதி விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும்! – WHO எச்சரிக்கை
திருட்டு ரூட்டை மாற்றும் கொள்ளையர்கள்: டிஜிபி வார்னிங்!