நடப்பு வாரத்தில் இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை வெளியான நாளில் இருந்து அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன.
இதனால் டாப் 25 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி குழுமம் வெளியேறியுள்ளது.
இந்திய பங்குச்சந்தை நேற்று வர்த்தகம் தொடங்கியது முதலே சரியத் தொடங்கியது. குறிப்பாக, அதானி நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 927 புள்ளிகளும், நிப்டி 272 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தது. இதனால் வர்த்தகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிலும் குறிப்பாக அதானி குழும பங்குகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
1,540 ரூபாய்க்கு தொடங்கிய அதானி நிறுவன பங்கு விலை வர்த்தக முடிவில் 1,400 ரூபாயாக சரிந்துள்ளது.
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் முறைகேடு அறிக்கை எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகள் ஒரே மாதத்தில் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளன.
அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குகள் நேற்றும் சரிவிலேயே இருந்தன.
குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு மதிப்பு அதிகபட்சமாக 7 சதவிகிதம் அளவுக்கு சரிந்தது.
அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு சராசரியாக 5 சதவிகிதம் சரிந்துள்ளது.
அதானி போர்ட் நிறுவன பங்கு மதிப்பு 3 சதவிகிதத்துக்கும் மேல் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
குறிப்பாக டாப் 25 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து அதானி குழுமத்தின் நிறுவனங்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டுள்ளன.
அதானி என்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி வில்மர், அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏசிசி லிமிடெட் ஆகிய பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பை இழந்துள்ளன.
செலவீனங்களைக் குறைத்து கடன்களைத் திருப்பி செலுத்திய போதிலும், அதானி குழுமத்தின் நடவடிக்கை முதலீட்டாளர்களிடம் போதிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
பங்கு மதிப்பு சரிவு எதிரொலியாக கெளதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிந்துவிட்டதால் உலக செல்வந்தர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்த கெளதம் அதானி, தற்போது 27 வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இதனால் வர்த்தகர்களும், முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராஜ்
டாப் 10 செய்திகள் இதை மிஸ் பண்ணாதீங்க!
திருப்பதி: தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!
கிச்சன் கீர்த்தனா: சிக்கன் பர்கர்!
அதிமுக பொதுக்குழு க்ளைமாக்ஸ் தீர்ப்பு- கட்சியைக் கைப்பற்றப் போவது யார்? முழுப் பின்னணி!