“ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது” – அதானி குழுமம் விளக்கம்!

இந்தியா

வெளிநாடுகளில் உள்ள மோசடியான அதானி நிறுவனங்களில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகிய இருவரும் பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டர்பர்க் நிறுவனம் கட்டுரை வெளியிட்டது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டிற்கு அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அதானி குழும செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஹிண்டன்பர்க்கின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் தீங்கிழைக்கும் உள்நோக்கத்துடன் உள்ளது. பொதுவெளியில் கிடைக்கக்கூடிய தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு தனிப்பட்ட சிலரின் லாபத்துக்காக உண்மைகளையும் சட்டத்தையும் அலட்சியம் செய்துவிட்டு முன்முடிவுகளுக்கு வந்துவிட முடியாது.

அதானி குழுமத்திற்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். இந்த புகார்கள் அனைத்தையும் முழுமையாக விசாரித்து ஆதாரமற்றவை என்று உச்சநீதிமன்றம்  கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.

பல பொது ஆவணங்களில் தொடர்புடைய அனைத்து விவரங்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டு, எங்கள் வெளிநாட்டு ஹோல்டிங் அமைப்பு முற்றிலும் வெளிப்படையானது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

எங்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் சிலருடன் வணிக உறவு வைத்திருப்பதாக கூறும் தகவல்கள் பொய்யானது. ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் இந்தியச் சட்டங்களை அவமதிக்கும் வகையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மட்டன் சாப்பாடு கேட்ட கணவர்… கொஞ்சம் கூட யோசிக்காமல் உயிரை எடுத்த மனைவி! 

செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: காங்கிரஸ் முக்கிய டிமாண்ட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *