இஸ்ரேலில் உள்ள முக்கிய துறைமுகத்தை வாங்கிய அதானி நிறுவனம்!

இந்தியா

ஹிண்டன்பர்க் விவகாரம் உலகளவில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலின் முக்கியமான துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளது. 

ஹைஃபா துறைமுகமானது சரக்கு கப்பல்களை கையாளும் அடிப்படையில் இஸ்ரேல் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். சுற்றுலா பயணக் கப்பல்களை அனுப்புவதில் மிகப் பெரிய துறைமுகமாக விளங்குகிறது.

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஹிண்டன்பர்க், அதானி குழுமத்துக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து ஆய்வறிக்கை வெளியிட்டது.

இந்த விவகாரம் உலகளவில் விவாதிக்கப்பட்டு வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்த, அதானி குழும பங்குகள் சரியத் தொடங்கின.

இந்த சரிவுக்கு மத்தியில் அதானி குழுமம் புதிய துறைமுகத்தை வாங்கியிருக்கிறது.  

டெல் அவிவ் நகரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தைத் திறப்பது உட்பட இஸ்ரேலில் அதிக முதலீடு செய்வதற்கான அதானி நிறுவனத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைஃபா நகரத்தை வளர்ச்சி அடைய செய்ய உள்ளதாக அதானி நிறுவனம் உறுதியளித்துள்ளது.

ஹைஃபா துறைமுகத்தைக் கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய அதானி, முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும்  துறைமுகத்தில் ரியல் எஸ்டேட்டை உருவாக்க உள்ளதாகவும் கூறினார்.

அதானி குழுமத்துடனான ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் மிகப்பெரிய மைல்கல் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு குறிப்பிட்டார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை கணிசமாக மேம்படுத்தும் என்றும் கூறினார்.

ராஜன்

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்!

அமெரிக்க – பார்ப்பனிய ஏகாதிபத்திய முரணும் சுயாட்சிக்கான வாய்ப்பும் – பகுதி 2

+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *