ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படையில் அதானி நிறுவன பங்குகள் மோசடி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
அதானி நிறுவன பங்குகள் மோசடி விவகாரம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று(பிப்ரவரி 17) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு மற்றும் செபி அமைப்பு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ஹின்டன்பர்க் அறிக்கை தொடர்பான விசாரணைக்கான செபியின் பரிந்துரையை சீலிட்ட கவரில் நீதிபதிகளிடம் வழங்கினார்.
அதனை தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு அலோசனை நடத்தியது.
அப்போது, மத்திய அரசு தரப்பில்:-
அதானி குழுமத்துக்கு எதிரான ஹின்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணைக்கு நீதிபதி ஒருவரின் தலைமையிலான குழு அமைக்கலாம்.
யார் அந்த நீதிபதி என்பதை நீதிமன்றம் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது
இதனையடுத்து பேசிய நீதிபதிகள்:-
மத்திய அரசின் சீலிட்ட கவர் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும், சீலிட்ட கவரில் நிபுணர்கள் பெயரை பரிந்துரையை வழங்க வேண்டாம், ஏனெனில் நீதிமன்றம் விசாரணை குழுவை இறுதி செய்யும் என தெரிவித்தனர்.
மேலும் , விசாரணையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்.
எனவே மத்திய அரசு பரிந்துரைத்த குழுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக இருக்கக் கூடாது என கூறிய நீதிபதிகள்,
வேண்டுமானால் சீலிட்ட கவரில் உள்விவரங்களை பொது வெளியில் மத்திய அரசு முன்வைக்க வேண்டும் எனவும், ஆனால் இறுதி முடிவை நீதிமன்றம் தான் எடுக்கும் என தெரிவித்தனர்
அப்போது குறுக்கிட்ட மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்:-
ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், ஏனெனில் விதிகளை மீறி 75% பங்குகளை அதானி நிறுவனமே வைத்துள்ளது.
அதை வெளிநாடுகளில் உள்ள offshore shell நிறுவனங்களில் முதலீடு செய்து சந்தையில் பங்குகளின் மதிப்பை அதிகரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, அறிக்கையின் அடிப்படையில், அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, சந்தை அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்பதை விரிவாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்:- மத்திய அரசு மட்டுமல்ல எந்த தரப்பிடம் இருந்து பெயர்கள் பரிந்துரை பெறப்போவதில்லை என்றும்,
இந்த நீதிமன்றமே குழுவின் உறுப்பினர்களின் பெயர்களை இறுதி செய்யும் என தெரிவித்தார்.
மேலும், தற்போது பதவியில் இருக்கும் நீதிபதியை நியமிக்க இயலாது என்பதால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும்,
உச்சநீதிமன்றம் அமைக்கும் நிபுணர்கள் குழுவுக்கு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து அதானி குழுமம் பங்குகள் முறைகேடு தொடர்பான விரிவான விசாரணை கோரிய வழக்குகள் மீதான உத்தரவை ஒத்திவைத்தார்.
கலை.ரா
சாதனை மேல் சாதனை: குஷியில் அஸ்வின்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!