நாளை (ஜனவரி 22) நடைபெறவிருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக, நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நாளை மிகுந்த விமரிசையுடன் நடைபெறவுள்ளது.
இதில் பிரதமர் மோடி தொடங்கி நாடு முழுவதுமுள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக கோயில் வளாகம் முழுவதும் இயற்கையான வண்ண மலர்கள், அலங்கார விளக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இந்த கும்பாபிஷேகம் விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜனவரி 21) தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டில் இருந்து அயோத்தி புறப்பட்டு சென்றுள்ளார்.
கிளம்புவதற்கு முன் அளித்த பேட்டியில், ” ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து அயோத்திக்கு ரஜினி செல்லவிருக்கிறார். முன்னதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் சகோதரர் சத்திய நாராயணா ஆகியோர் தனித்தனி வாகனங்களில் விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனால் ராமர் கோயில் விழாவில் மனைவி லதா, சகோதரர் சத்திய நாராயணா ஆகியோருடன் ரஜினியும் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநர் பதவியை ஒழிப்போம்… இந்துக்களுக்கு எதிரி பாஜக: திமுக இளைஞரணி மாநாட்டின் தீர்மானங்கள்!