கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகருக்குள் போராளி குழுக்கள் நுழைந்ததால் அந்த நாட்டு அதிபர் ஆசாத் தப்பி ஓடி விட்டார். அவர், ரஷ்யாவில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிரியாவில் ஆட்சி கவிழ ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் எனப்படும் ஹெச்.டி.எஸ் என்ற போராளி குழுதான் முக்கிய காரணம். அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
இவருக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முழு ஆதரவு கிடைத்துள்ளது. ஜோலோனி டமாஸ்கசை கைப்பற்றியதும் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பின் ஆயுதக்கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்கி அழித்துள்ளது.
அமெரிக்கா ஜோலானியை நேரடியாக தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் தெரிகிறது. பிரிட்டனும் ஹெச்.டி.எஸ் அமைப்பை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது. துருக்கியில் தஞ்சமடைந்த சிரிய அகதிகளும் தாய் நாடு நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே ஜோலானி , இஸ்ரேல் டமாஸ்கஸ் பகுதியிலுள்ள 75 ஐ.எஸ். ஆயுதக்கிங்குகளை தாக்கி அழித்துள்ளது. எங்களது அடுத்த இலக்கு ஈரான்தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஜோலானியை அமெரிக்கா குட்புக்கில் வைத்துள்ளது. இவரின் ஹெச்.டி.எஸ் அமைப்பு பல ஆண்டு காலமாக தீவிரவாத செயல்களில் ஈடுபடவில்லை. அரசுக்கு எதிராக மட்டுமே போராடுவதாக அமெரிக்கா கருதுகிறது. கெமிக்கல் ஆயுதங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். ஆயுதங்கள் தவறானவர்கள் கைக்கு சென்று விடக் கூடாது என்பது ஜிலானியின் நோக்கமாக இருப்பதை அமெரிக்கா பாராட்டுகிறது.
சிரியாவில் ஈரானின் ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுத வேண்டும் என்கிற ஜோலானியின் லட்சியத்துக்கும் அமெரிக்கா உதவிக்கரமாக இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், ஜோலானிக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் ஆதரவு பரிபூரணமாக கிடைத்துள்ளதாகவே சொல்லப்படுகிறது.
சிரிய அதிபர் ஆசாத் தன்னை எதிர்ப்பவர்களை பாதாள அறைகளில் அடைத்து வைத்துள்ளதாக தகவல் உண்டு. அத்தகைய பாதாள சிறைகள் பற்றி தகவல் சொன்னால், கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் பரிசு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
ஜாமீன் கிடைத்தும் சிறையில் கைதிகள் : நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
Comments are closed.