ஆதாரை புதுப்பிப்பது அவசியம்: மத்திய அரசு அதிரடி!

இந்தியா

’ஆதார் அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதுப்பித்துக் கொள்ள வேண்டும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று அரசாங்க சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளையும் பெறுவதற்கு கட்டாயம் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இசேவை மையங்களில் தவம் கிடக்கின்றனர்.

இதுநாள் வரை, 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

aadhaar card update compulsory

இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அரசாணையில், ‘ஆதார் அட்டையில் மோசடிகள் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், ஆதார் அட்டை பெறும்போது அளித்த அடையாள சான்றிதழ்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளித்து புதுப்பித்துக் கொள்வதன் மூலம், ஆதார் அட்டையின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆதார் அட்டை தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், மாறும் தகவல்களும் புதுப்பிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை விவரங்களை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கான வசதியை யுஐடிஏஐ மேற்கொண்டுள்ளது. இந்த வசதி, மை ஆதார் இணையதளம், மை ஆதார் செயலி மூலமாக பயனாளர்களே செய்து கொள்ளலாம் என்றும், ஆதார் சேவை மையங்களில் நேரடியாகச் சென்றும் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

குஜராத் தேர்தல்: மனைவியா… சகோதரியா – ஜடேஜா யார் பக்கம்?

”ஒரு வேலையும் செய்யாம மந்திரியா இருப்பியா?” தா.மோ. அன்பரசனை கலாய்த்த நேரு

+1
0
+1
3
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *