கடந்த ஏப்ரல் 23 அன்று அதிகாலை 1 மணியளவில் ஒரு அரிய வானியல் நிகழ்வு நடந்தது. அதாவது சூரியனில் ஒரே நேரத்தில் நான்கு வெடிப்புகள் ஏற்பட்டது. இதனை சூரிய மாற்றத்தின் 11-ஆண்டு சுழற்சி என்று கூறலாம். இதனை நாசா துல்லியமாக படம் பிடித்தது.
ஒரே நேரத்தில் நடந்த இந்த சூரிய வெடிப்புகளின் ஒரு பகுதி ’சிம்பசடிக் சூரிய வெடிப்பு’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது சூரியனின் காந்த விசைப் பகுதியில் இருந்து நடைபெற்ற பல வெடிப்புகளைத் தான் சிம்பசடிக் சூரிய வெடிப்பு என்று கூறுகின்றோம். ஒரு வெடிப்பு ஏற்பட்டவுடன் அதன் தொடர்ச்சியாக பல வெடிப்புகள் நடைபெறுகின்றன. இத்தகைய சூரிய செயல்பாடு என்பது சூரியன் அதன் 11 ஆண்டு சுழற்சியின் உச்சத்தை அடைவதற்கான அறிகுறி ஆகும். இந்தாண்டு மூன்றாவது முறையாக நடைபெறும் சூரிய வெடிப்பு ஆகும்.
சூரியனால் உருவாக்கக்கூடிய மிக சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு என்பதால் இதனை சூப்பர் சிம்பதடிக் சூரிய வெடிப்பு வகையாகும். அதனால் தான் இதனை மிகவும் அரிய வகை என்று குறிப்பிடுகிறார்கள்.
இதனால் பூமிக்கு ஆபத்தா?
இதன் தாக்கம் பூமியை நோக்கி வருமானால், அவை மின்சாரம், தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் மற்றும் சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை சீர்குலைக்கும் மற்றும் விண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் திறன் கொண்டவை என்று space.com தெரிவித்துள்ளது.
ஏப்ரல் இறுதி தேதிகளில் சிறிய வகை G1 புவி காந்த புயல்கள் குறைந்த அட்சரேகைகளில் வானத்தை ஒளிரச் செய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பவித்ரா