2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கும் அறிவிப்பை இன்று (ஜூலை 22) வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களை திறன்படுத்துவதற்கான புதிய மத்திய நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு சிறந்த 500 நிறுவனங்களில் வாய்ப்பு அளிக்கும் வகையில் இன்டர்ன்ஷிப் திட்டத்தை அரசு தொடங்கும். இந்த திட்டத்தில் மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகை மற்றும் ரூ. 6000 ஒரு முறை உதவி தொகை வழங்கப்படும்.
புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும். இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும். இது மூன்று மாத தவணையாக ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன்மூலம் 2.1 கோடி இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
தேசிய தொழில்துறை கேரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 12 தொழில் பூங்காக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தங்கம் முதல் புற்றுநோய்களுக்கான மருந்து வரை… எது எதற்கு வரி குறைப்பு!
பட்ஜெட் : உங்கள் சம்பளம் எவ்வளவு? வருமான வரி வரம்பில் மாற்றம்!