ஒரே மாதத்தில் 30 ஆயிரம் கார்கள் விற்பனை: மாருதியில் எந்த ரக கார் அது?

Published On:

| By Kumaresan M

மாருதி நிறுவனத்தின் ஒரே ரக கார் ஒன்று ஒரே மாதத்தில் 30 ஆயிரம் விற்று சாதனை படைத்துள்ளது.

மாருதி நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம். இந்திய கார் சந்தையில் 40 சதவிகிதத்தை மாருதி நிறுவனம் வைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் மாருதி நிறுவனம் 2,52,693 கார்களை விற்றுள்ளது. அதில் மாருதி சுசூகி ஸ்விப்ட் மட்டும் டிசம்பர் மாதத்தில் 29,765 விற்பனையாகி சாதித்துள்ளது.

மாருதி சுசூகி ஸ்விப்ட் நான்காம் தலைமுறை கார் கடந்த மே மாதத்தில் அறிமுகமானது. அதன் அழகான தோற்றமும் எரிபொருள் செலவு மிச்சம் காரணமாகவும் மக்கள் இந்த காரை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த கார் ரூ.6.49 லட்சத்தில் இருந்து ரூ.9.59 லட்சம் வரை விற்பனையாகிறது. இந்த ரக கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கிட்டத்தட்ட 24 கி.மீ மைலேஜ் தருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாருதி நிறுவனம் சுமார் 1,450 கோடி செலவில் நான்காம் தலைமுறை ஸ்விஃப் கார் ரகத்தை உருவாக்கியுள்ளது. குஜராத்திலுள்ள சுசூகி ஆலையில் இந்த கார்  உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.  

-எம்.குமரேசன்


“அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கவில்லை” – அன்பில் மகேஷ் விளக்கம்!


டெல்லி தேர்தல்: GOAT விஜய் ஆக மாறிய கெஜ்ரிவால்











செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share