2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்திய பங்குச்சந்தையில் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் கடும் சரிவையும் உச்சத்தையும் அடைந்து வருகின்றன.
ஜூலை 24 புதன்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச் பென்ச்மார்க் குறியீடுகள் சென்செக்ஸ் 280.16 புள்ளிகள் சரிந்து 80,148.88 ஆகவும், நிஃப்டி 65.55 புள்ளிகள் குறைந்து 24,413.50 ஆகவும் முடிவடைந்தது.
ரியல் எஸ்டேட் துறை சார்ந்த சோபா, ப்ரெஸ்டீஜ் எஸ்டேட் ப்ராஜெக்ட்ஸ், டிஎல்எஃப், பிரிகேட் எண்டர்பிரைசஸ் மற்றும் மேக்ரோடெக் டெவலப்பர்கள் நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்த நிலையில் நேற்று புதன்கிழமை வர்த்தகத்தில் ஓரளவு மீண்டன.
NSEல் HDFC லைஃப் (4.36%), டெக் மஹிந்திரா (3.12%), BPCL (2.91%), NTPC (2.67%), டாடா மோட்டார்ஸ் (2.46%) உயர்ந்து லாபத்தையும் பஜாஜ் ஃபின்சர்வ் (-2.09%), டாடா நுகர்வோர் தயாரிப்புகள் (-1.90%), பிரிட்டானியா (-1.88%), ஆக்சிஸ் வங்கி (-1.82%), பஜாஜ் ஃபைனான்ஸ் (-1.67%) சரிந்து முதலீட்டாளர்களுக்கு நட்டத்தையும் கொடுத்தன.
பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், HUL, நெஸ்லே இந்தியா, அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, கோடக் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டதன் எதிரொலியாக சந்தை உயர்வு ஓரளவு முடங்கியது.
IFCI, MMTC, State Trading Corporation of India (STC India), Suzlon Energy, Raymond, Shakti Pumps (India) and Heritage Foods உள்ளிட்ட 354 நிறுவன பங்குகள் புதன்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் புதிய உச்சத்தை ( Upper Circuit) அடைந்தன.
Long Term Capital Gain and Short Term Capital Gain வரி உயர்வு காரணமாக வங்கி மற்றும் நிதி சார்ந்த முதலீடுகள் சரிய வாய்ப்புள்ளது எனவும், இதனால் உலக வர்த்தக சந்தையில் இந்திய பொருளாதாரம் பலமிழந்து போகும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், அதுகுறித்து விரைவில் ஆலோசனை செய்து வரி உயர்வை மறு ஆய்வு செய்ய உள்ளதாக நிதியமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
CG Power and Inderatrial Solution நிறுவனம் CO GG TRONICS நிறுவனத்தின் 55% பங்குகளை, பங்கு ஒன்று 3.19 ரூபாய் விலையில் கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
818 ரூபாய் மதிப்பு கொண்ட 3,66,47,492 பங்குகள் மூலமாக சுமார் 3,000 கோடி அளவுக்கு உரிமை வெளியீட்டு திட்டத்திற்கு (Right Issue) நிர்வாக வாரியக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்த நிலையில் Tata Consumer Product நிறுவனத்தின் பங்கு புதன்கிழமை காலை வர்த்தகத்தில் 3% வரை சரிவை கண்டது . வர்த்தக முடிவில் ஒரளவு மீண்டு 1233 ரூபாயில் முடிவடைந்தது.
ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஆக்ஸிஸ் வங்கியின் நிகர லாபம் 4 சதவீதம் அதிகரித்து 6,035 கோடியை ஈட்டியதாகவும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய 5797 கோடியை ஒப்பிடுகையில் இது 4% வளர்ச்சி என்று தெரிவித்துள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு 24 ரூபாய் குறைந்து 1239 ரூபாயில் முடிவடைந்தது.
தனியார் ஆயுள் காப்பீடு நிறுவனமான SBI Life ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிகர லாபம் 34.3% உயர்ந்து 519.52 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் திரட்டிய புதிய காப்பீடு எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 12% உயர்ந்து 970 கோடி மதிப்பிலான புதிய பாலியை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் SBI Life Insurance Company Ltd பங்கு 38.10 ரூபாய் உயர்ந்து 1632.95 ரூபாயில் முடிவடைந்தது.
Bajaj Finserv Ltd (BFL) நிறுவனம் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 2138 கோடியை நிகர லாபமாக ஈட்டியதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய 1943 கோடியை ஒப்பிடுகையில் இது 10% வளர்ச்சி என்று தெரிவித்துள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் Bajaj Finserv Ltd (BFL) பங்கு 39.60 ரூபாய் குறைந்து 1579.25 ரூபாயில் முடிவடைந்தது.
Jindal Steel and Power நிறுவனம் முதலாவது காலாண்டில் வரிக்கு பிந்தை லாபம் PAT 21% சரிந்து 1,338 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தல் தாக்கம் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் நீடித்ததால், எஃகு இறக்குமதி தேவையை வெகுவாக முடக்கியது எனவும் இதனால் எஃகு உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான ரீபாரின் விலை கடுமையாக உயர்ந்து செலவுகள் 8 சதவீதம் அதிகரித்து 11,793 கோடி ரூபாய் வரை செலவீனம் உயர்ந்ததாக தெரிவித்துள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் Jindal Steel and Power பங்கு விலை 19.65 ரூபாய் உயர்ந்து 972.45 ரூபாயில் முடிவடைந்தது.
பொதுத்துறை நிறுவனமான BSNL அதன் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனீட்டுக்கு முந்தைய வருவாய் EBITDA நிதியாண்டில் 2,164 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அதே நேரத்தில் நிறுவனத்தின் நிகர இழப்பு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சந்தித்த 8161 கோடி இழப்பை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 5,371 கோடியாக குறைந்துள்ளதாக நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
75வது அமுதப் பெருவிழா சுதந்திர திருநாள் திட்டத்தின் கீழ் BSNL நிறுவனம் உள்நாட்டில் 4G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக 1 லட்சம் புதிய 4G உபகரணங்களை ஆர்டர் செய்துள்ளதாகவும் புதிய உபகரணங்கள் 5G க்கு மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கடும் மூலதன நெருக்கடியில் இருந்த BSNL நிறுவனத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு , 69,000 கோடியும் 2022ம் ஆண்டு 1.64 லட்சம் கோடியும் மூலதன நிதியாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிலையில். கடந்த 2023ம் ஆண்டு BSNL நிறுவனத்திற்கு 4G/5G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய சுமார் 89,000 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 25 வியாழக்கிழமை காலை முதல் அமர்வில் இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் எதிர்மறையான குறிப்புடன் திறக்கப்பட்டன, சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 79,542 புள்ளியிலும், நிஃப்டி குறியீடு 183 புள்ளிகள் சரிந்தது வர்த்தகம் தொடங்கியது.
வியாழக்கிழமை காலை அமர்வில் கிட்டத்தட்ட அனைத்து துறை குறியீடுகளும் சரிவுடன் தொடக்கத்தைக் கண்டன; வங்கி, உலோக குறியீடுகள் தலா 1% சரிந்தன.
பல்வேறு செய்திகள் காரணமாக Axis Bk, LT, RBL Bk, BSE, Nestle, IGL, Canara Bk நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.
Aavas Financiers, Adani Green Energy, Ashok Leyland, AU Small Finance Bank, Canara Bank, Chalet Hotels, Chennai Petrochem Corp, Cyient, DLF, Glenmark Life Sciences, Go Digital General Insurance, Home First Finance Company India, Jupiter Wagons, Jyothy Labs, Laurus Labs, MGL, Motilal Oswal Financial Services, Mphasis, Nestle India, PNB Housing Finance, Praj Industries, The Ramco Cements, Tech Mahindra, United Breweries, Ujjivan small finance Bank, UTI AMC, Venus Pipes and Tubes, and Westlife Foodworld நிறுவனங்கள் வியாழக்கிழமை இன்று முதலாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணியன் கலியமூர்த்தி
களைகட்டும் பாரீஸ் ஒலிம்பிக் : ஆபத்தில் இஸ்ரேலிய வீரர்கள்!
அரசியலாகும் தங்கலான் – டிமாண்டி காலனி – 2