காதுக்கு அருகே டியூசன் ஆசிரியர், இருமுறை பலமாக அறைந்ததில், மூளைக் காயமடைந்த ஒன்பது வயது மாணவி, வென்டிலேட்டர் உதவியோடு கவலைக்கிடமான நிலையில் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மும்பை அருகே, நல்லசோபரா என்ற பகுதியில், ஒன்பது வயது சிறுமியை, அக்டோபர் 5-ம் தேதி ஆசிரியர் தாக்கிய நிலையில், கடந்த சில நாள்களாக, சிறுமிக்கு சில உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள காவல்துறையினர், “20 வயது டியூசன் ஆசிரியர் ரத்னா சிங், வகுப்பில் சிறுமியின் கன்னத்தில் இரண்டு முறை அடித்துள்ளார். ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், சிறுமியின் கம்மல் கன்னத்தில் புதைந்து போயிருக்கிறது.
இந்த நிலையில், அடுத்தடுத்து நாட்களில் சிறுமிக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துசோதனை செய்தபோதுதான், அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு, தாடை இறுதி, மூச்சுக்குழாயில் காயம் ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பத்து நாள்களாக அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆசிரியரிடம் விசாரணை நடைபெறுகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: மழை, குளிர்காலம்… மூச்சுவிடுவதில் சிரமப்படுபவரா நீங்கள்?
டாப் 10 நியூஸ் : கரையை கடக்கும் டாணா புயல் முதல் INDvsNZ 2வது டெஸ்ட் போட்டி வரை!
4 மாநிலங்கள்… 29 செல்போன் டவர் கொள்ளையர்கள்… தமிழ்நாடு போலீஸின் ‘பான் இந்தியா’ ஆபரேஷன்!
ஒரே அணிக்காக விளையாடிய தந்தை, மகன்… என்.பி.ஏ.வில் லெப்ரான் சாதனை!