ஒரே நாளில் 9 லாட்டரி விற்பனையாளர்கள் கைது… அதிரடியாக களமிறங்கிய கலைவாணன் ஐபிஎஸ் : யார் இவர்?

இந்தியா

புதுச்சேரி புதிய எஸ்எஸ்பி கலைவாணன் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஒரே நாளில் சட்டவிரோத லாட்டரி விற்பனையாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளச்சாரயம், மது போன்று லாட்டரி சீட்டால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஏராளம். லாட்டரி சீட்டை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதும் சட்ட விரோதமாக விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தநிலையில் தான் புதுச்சேரியில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) பொறுப்பேற்றுள்ள கலைவாணன் ஐபிஎஸ், லாட்டரி விற்பனையாளர்களையும், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளையும் கைது செய்ய களத்தில் இறங்கியுள்ளார்.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி சட்டம் ஒழுங்கு எஸ்எஸ்பி யாக பொறுப்பேற்ற கலைவாணன், ஏனாம் எஸ்பி, புதுச்சேரி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு எஸ்பி.க்கள், போதைத் தடுப்பு பிரிவு எஸ்பி, எஸ்டிஎஃப் எஸ்பி ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.

அப்போது, “உங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ரவுடிகள் விவரங்கள், சிறையில் இருப்பவர்கள், வெளியில் இருப்பவர்கள், பின்னணியில் இருப்பவர்கள், பொருளாதார உதவிகள் செய்பவர்கள் ஆகியோரின் விவரங்கள் முழுமையாக வேண்டும்” என்று கேட்டுள்ளார் கலைவணான்.

அதுபோன்று, மக்களை அச்சுறுத்தும் வகையில் ரவுடிகள் செயல்கள் உள்ளது. அதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று ஸ்பெஷல் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளார்.

“அடுத்ததாக, புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் கொடிக்கட்டி பறக்கிறது, அதை முழுமையாக தடுக்க வேண்டும், அதற்கு ஒரே வழி போலீஸார் மாமூல் வாங்குவதை நிறுத்தினாலே லாட்டரி வியாபாரம் மட்டும் அல்ல, தடை செய்யப்பட்ட பொருட்களின் எந்த வியபாரமூம் நடக்காது.

லாட்டரி சீட் வியாபாரிகளின் பட்டியல் கொடுத்து உடனடியாக கைது செய்யுங்கள். அமைச்சர் சொன்னார், எம்எல்ஏ சொன்னார், என்று யாரையும் தப்பிக்க விட்டுவிடக்கூடாது” என்று உத்தரவிட்டார்.

ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் போதைப் பொருட்களை பயன்படுத்திவிட்டு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த உத்தரவை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில், லாட்டரி சீட்டுகள் விற்ற வில்லியனுார் வேல்முருகன், வாணரபேட்டை விஜயன், பிள்ளைத்தோட்டம் பழனிகுமார், சாரம் ஸ்டீபன் ராஜ், கவுண்டம்பாளையம் குமரன், வேல்ராம்பட்டு கதிர்வேல், முதலியார்பேட்டை குமார், தயாளன், டோனி, ஆகிய 9 பேரை கைது செய்தனர். இன்று(நவம்பர் 7) ஒருவர் என மொத்தம் இதுவரை 10 கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாட்டரி சீட் மொத்த வியாபாரியான சரவணனை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

நவம்பர் 1ஆம் தேதி பதவியேற்றது முதல் எஸ்எஸ்பி கலைவாணன் எடுத்து வரும் நடவடிக்கை புதுச்சேரி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

யார் இந்த கலைவாணன் ஐபிஎஸ்?

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்பா ரங்கநாதன் அரசு ஊழியர். அம்மா வசந்தி அரசு பள்ளி தலைமை ஆசிரியர். தங்கை நித்திய ஸ்ரீ ரேணுகா மெரிட்டில் மெடிக்கல் சீட் கிடைத்து கோவை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கலைவாணன் பள்ளியில் படிக்கும் போதே பள்ளியிலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்று பாராட்டுக்களைப் பெற்றவர்.

ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று உறுதியோடு டெல்லியில் தங்கி யுபிஎஸ்சி படித்து போது, நேரத்தை திட்டமிட்டு சரியான நேரத்தில் முடிப்பவர்.

ஹைதராபாத் சர்தார் வல்லபபாய் பட்டேல் நேஷனல் போலிஸ் அகாடமியில் பயிற்சியின் போது ஜனாதிபதி வழங்கக்கூடிய விருதை (best All over probationer award) ஒரு மார்க்கில் தவறவிட்டார் என்றாலும் பணியில் நேர்மை கடமை கன்னியம் கட்டுப்பாடுடன் செயலாற்றி வருவதாக சொல்கிறார்கள் புதுச்சேரி அதிகாரிகள்.

முதலில் அந்தமான் நிக்கோபாரில் சில ஆண்டுக்காலம் பணி செய்துவிட்டு, புதுச்சேரி பிரதேசத்திற்கு 2024 மார்ச் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டு சைபர் க்ரைம் எஸ்எஸ்பியாக பணியாற்றி முக்கிய வழக்குகளை கையாண்டு வந்தவர் தற்போது சட்டம் ஒழுங்கு எஸ்எஸ்பியாக உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

விறுவிறுக்கும் கட்சிப் பணிகள்… கள ஆய்வு குழுவை நியமித்த எடப்பாடி

நேருவுடன் நயினார் சந்திப்பு?  நெல்லையில் கிளம்பும் புயல்!

+1
3
+1
0
+1
1
+1
31
+1
2
+1
2
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *