இந்தியாவின் அடையாளம் வந்தே பாரத் ரயில்: மோடி

இந்தியா

செகந்திராபாத்- விசாகப்பட்டினம் இடையிலான எட்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 15) தொடங்கி வைத்தார்.

மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத் சென்னை டூ பெங்களூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் 8ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று காலை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் முதல் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் வரை இயக்கப்படுகிறது.

ஏசி வசதியுடன் கூடிய 14 பெட்டிகள், 2 சிறப்பு பிரிவு பெட்டிகள் என மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1,128 பேர் ஒரு சமயத்தில் பயணிக்க முடியும்.

சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் முழுவதும் இருக்கை வசதி கொண்டது. ஆறு மணி நேரம் முதல் ஏழு மணி நேரம் வரை மட்டுமே பயண நேரம் என்பதால் படுக்கை வசதி கிடையாது.

இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, “வந்தே பாரத் ரயில் புதிய இந்தியா அமைவதற்கான சாத்தியக்கூறுகளின் சின்னமாகும்.

மாற்றத்தின் பாதையில் செல்லும் இந்தியாவின் அடையாளமாகவும் உள்ளது” என்று கூறினார்.

காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி ரயில் சேவையை தொடங்கி வைத்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்தபடி பங்கேற்றனர்.

பிரியா

பொங்கல் காசு கொடுத்த மு.க.ஸ்டாலின்

சிறுத்தை சிவா சகோதரர் வீட்டில் தாக்குதல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *