சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளம்.. 8 பேர் பலி!

Published On:

| By christopher

மேற்கு வங்கத்தில் துர்கா தேவி சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் ஆண்டுதோறும் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது..

இந்நிலையில் விழாவின் கடைசி நாள் என்பதால் நேற்றிரவு (அக்டோபர் 5) ஜல்பைகுரியில் உள்ள மால் ஆற்றில் துர்கா தேவி சிலைகளை கரைக்க பொதுமக்கள் சென்றுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் மாயமான நிலையில், இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ஜல்பைகுரி மாவட்ட நீதிபதி மௌமிதா கோதாரா தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் ஆகியோர் தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்!

இந்நிலையில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் துர்கா பூஜை விழாவின் போது நடந்த அசம்பாவிதத்தால் வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்த ​​வங்காளத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலரை அடித்துச் சென்ற செய்தியால் வருத்தமடைந்ததாகக் கூறினார்.

மேலும், மீட்புப் பணிகளை முடுக்கிவிடுமாறும், துயரத்தில் உள்ளவர்களுக்கு உதவுமாறும் மாவட்ட, மாநில உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆறு பேர் உயிரைக் குடித்த கொள்ளிடம்! அனைத்து உடல்களும் மீட்பு!

விக்ரம் சாதனையை வென்ற பொன்னியின் செல்வன்: கமல் மகிழ்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share