சிக்கிம் வெள்ளம்: மாயமான 77 பேர் இறந்திருக்கலாம்!

Published On:

| By christopher

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரை தேடும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், மாயமானவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி, லோனாக் ஏரிப் பகுதியில் மேக வெடிப்பின் காரணமாக கொட்டித்தீர்த்த அதீத கனமழையால், தீஸ்தா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்தனர். மேலும், வெள்ளத்தில் 77 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 2 பேரின் உடல்கள், அடையாளம் தெரியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 77 பேரை தேடும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், அவர்களின் கதி என்ன என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு மாதங்களைக் கடந்து விட்ட நிலையில், மாயமானவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும், அவர்கள் அனைவரும் இறந்திருக்கக்கூடும் எனவும் சிக்கிம் தலைமைச் செயலாளர் விபி பதாக் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, அவர்களின் குடும்பத்துக்கு, இயற்கை பேரிடர்களால் உயிரிழப்போருக்கு வழங்கப்படும் நிவாரணத்தின் கீழ், மாநில அரசு நிவாரணத் தொகையாக ரூ.4 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

பியூட்டி டிப்ஸ்: இளநரையை தடுப்பது எப்படி?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் பணி!

தெலங்கானாவில் வெற்றி வாகை சூடப்போவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel