இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்கள் பட்டியலில் சென்னை சென்ட்ரல் 3வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2023-24 ஆம் ஆண்டு ரயில்வே பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களின் பட்டியலை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
அதில், 7 ரயில் நிலையங்கள் 1000 கோடி வருவாயை எட்டியுள்ளன. பட்டியலில் டெல்லி ரயில் நிலையம் ரூ.3,337 கோடி வருவாயுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தை கொல்கத்தா ஹவுரா ரயில் நிலையம் பெறுகிறது. இந்த ரயில் நிலையத்தின் வருவாய் ரூ.1,692 கோடி ஆகும்.
மூன்றாவது இடத்தை பிடித்துள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வருவாய் ரூ.1,299 கோடி ஆகும். தென்னிந்தியாவில் இருந்து ரூ.1000 கோடி வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக பயணிகளை கையாளும் ரயில் நிலையங்கள் பட்டியலில் மும்பை புறநகர் பகுதியான தானே ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 9.3 கோடி பயணிகளை இந்த ரயில் நிலையம் கையாளுகிறது. இரண்டாவது இடத்தில் மும்பையின் மற்றொரு புறநகர் ரயில் நிலையமான கல்யாண் இருக்கிறது. இங்கு ஆண்டுக்கு 8.3 கோடி பேர் வந்து செல்கின்றனர். 3வது இடத்திலுள்ள புதுடெல்லி ரயில் நிலையத்துக்கு ஆண்டுக்கு 3.9 கோடி பேர் வந்து செல்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை எக்மோர் ரூ.564 கோடி வருவாய் ஈட்டி இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. கோவை ரூ.364 கோடியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. தென்னிந்தியாவில் ரயில்வேக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் நகரங்களில் முதல் 100-ல் 60 தமிழகத்தில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஆத்தி… 100 கோடி… சோசியல் மீடியாவில் ரொனால்டோவை பின்தொடருபவர்கள்!
மதுபான வழக்கு… அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்