ரயில் டிக்கெட் புக் பண்றீங்களா… உங்களுக்குத்தான் இந்த அப்டேட்!

Published On:

| By Minnambalam Login1

இனிமேல் ரயில் டிக்கெட்டுகளை பயண தேதியிலிருந்து 120 நாட்களுக்குப் பதிலாக 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யலாம் என்று இந்திய ரயில்வே துறை நேற்று(அக்டோபர் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொதுவாகப் பயண தேதியிலிருந்து 120 நாட்களுக்கு முன்பாக தான் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். இதனால் மக்கள் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு ஒன்றுக்கு பலமுறை யோசிக்கிற நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அதுவும் பயணம் செய்வதற்கு 4 மாசம் முன்பே அனைத்தையும் யோசிக்க வேண்டும் என்பதால் பலருக்குச் சிரமமாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் இந்திய ரயில்வே துறை  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான கால அளவு 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் அக்டோபர் 31 வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் டிக்கெட்களில் எந்த பாதிப்பும் இருக்காது.

ஆனால் இந்த மாற்றம் வெகு குறைவான முன்பதிவுக்கான கால அளவு கொண்ட தாஜ் எக்ஸ்பிரஸ், கோம்தி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களுக்குப் பொருந்தாது.

மேலும் வெளிநாட்டினவருக்கு இருக்கும் 365 நாட்கள் முன்பதிவுக்கான கால அளவிலும் எந்த மாற்றமும் இருக்காது” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

”அதிமுக பிரிந்துவிட்டதுனு இனி சொல்லாதீங்க” : எடப்பாடி ஆதங்கம்!

நெருங்கும் மாநாட்டு தேதி… அரசியல் பயிலரங்கம் நடத்தும் தவெக!

சந்திரசூட் பரிந்துரைத்த அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel