இந்தோனேசியாவின் தனிம்பார் தீவு பகுதியில் இன்று (பிப்ரவரி 17) மாலை 3 மணி அளவில் 6.4 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
துருக்கி – சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 42 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேற்று அதிகாலை பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.
இந்நிலையில் இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.07 மணிக்கு 6.4 ரிக்டர் அளவாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மலுகுவின் தலைநகரான அம்போனிலிருந்து தென்கிழக்கே 543 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தனிம்பார் தீவு பகுதியில் 97 கிமீ (60.27 மைல்) ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமிக்கு சாத்தியம் இல்லை என்று இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம் கூறி விட்டது.
மேலும் நிலநடுக்கத்தால் இதுவரை ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து அதிகாரபூர்வமாக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கிறிஸ்டோபர் ஜெமா
இடஒதுக்கீடு குறித்து சர்ச்சை கருத்து : வாத்தி இயக்குநரை வசைபாடும் நெட்டிசன்கள்
செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி புகார்: வழக்கறிஞர்கள் பரஸ்பரம் குற்றச்சாட்டு!