குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் உள்துறை செயலாளர்களை நீக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (மார்ச் 18) உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த மார்ச் 16ஆம் தேதி அறிவித்தார். தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக இந்தியா முழுவதும் அமல் படுத்தப்பட்டது.
முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. 7வது கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது.
இதனையடுத்து, குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை நீக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மேற்கு வங்க டிஜிபி-ஐ மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மிசோரம் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் பொது நிர்வாக துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
மும்பை மாநகராட்சியின் ஆணையாளர் இக்பால் சிங் சஹால், கூடுதல் ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் ஆகியோரையும் நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 3 ஆண்டுகள் பணியில் உள்ளவர்கள் அல்லது அவர்களுடைய சொந்த மாவட்டங்களில் பணியாற்றுபவர்களை பணியிட மாற்றம் செய்யும்படியும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்து
Bastar The Naxal Story : படம் எப்படி இருக்கிறது? – திரை விமர்சனம்