மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு : ரேபரேலியில் ராகுல் ஆய்வு!

5ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் இன்று (மே 20)  நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி வாக்குச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில், 4 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. 4 கட்ட தேர்தல்களில் மொத்தமாக 66.95 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, 8 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று (மே 20) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசம் – 14 தொகுதிகள், மகாராஷ்டிரா – 13 தொகுதிகள், மேற்கு வங்காளம் – 7 தொகுதிகள், பீகார் – 5 தொகுதிகள், ஒடிசா – 5 தொகுதிகள், ஜார்க்கண்ட் – 3 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீர் – 1 தொகுதி மற்றும் லடாக் – 1 தொகுதி என மொத்தம் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இதில், காலை 9 மணி நிலவரப்படி, 10.28 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி,

பீகார் – 21.11%

ஜம்மு-காஷ்மீர் – 21.37%

ஜார்க்கண்ட் – 26.18%

லடாக் – 27.87%

மகாராஷ்டிரா – 15.93%

ஒடிசா – 21.07%

உத்தரப்பிரதேசம் – 27.76%

மேற்கு வங்காளம் – 32.70%

மொத்தமாக 23.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் மற்றும் வடக்கு மும்பையின் பாஜக வேட்பாளர் பியூஸ் கோயல் தனது வாக்கினை செலுத்தினார்.

தானேவில் உள்ள வாக்குச்சாவடியில் மகாராஷ்டிராவின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது வாக்கினை செலுத்தினார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தினர்.

தொடர்ந்து, 5ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் உத்தரபிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், வாக்குச்சாவடிகளை பார்வையிடுவதற்காக  ரேபரேலி சென்றுள்ளார்.

அங்குள்ள ஹனுமன் மந்திர் கோயிலில் சாமி தரிசனம் செய்த, அவர் மகாத்மா காந்தி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ரேபரேலி தொகுதிக்குட்பட்ட  மேலும் சில வாக்குச் சாவடிகளில் இன்று ராகுல் ஆய்வு செய்யவுள்ளார்.

இந்நிலையில் ரேபரேலி பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங், “அமேதி மற்றும் ரேபரேலியில் தாமரை மலரும். அதில் எந்த குழப்பமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமர்சனம் ; ’குருவாயூர் அம்பலநடையில்’!

Gold Rate: ரூ.55 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை…!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts