அக்டோபர் 12ஆம் தேதிக்குள் 5ஜி சேவை: ஒன்றிய அமைச்சர்!

இந்தியா

அக்டோபர் 12ஆம் தேதிக்குள் 5ஜி சேவையை  அறிமுகப்படுத்துகிறோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 5ஜி சேவை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என்று ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது.

ஏழு நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன.

மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88,078 கோடிக்கும், ஏர்டெல் நிறுவனம் ரூ.43,048 கோடிக்கும், வோடபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18,799 கோடிக்கும், அதானி நிறுவனம் ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்தன.

இந்த நிலையில் டெல்லியில் 5ஜி சேவை குறித்து பேசியுள்ள ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “நாங்கள் 5ஜி சேவைகளை விரைவாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் அந்த வகையில் வேலை செய்து வருகின்றனர். நிறுவல்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அக்டோபர் 12ஆம் தேதிக்குள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவோம். அதன் பிறகு நகரங்கள் மற்றும் நகரங்களில் மேலும் விரிவடையும் என்று நம்புகிறோம்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 5ஜி சேவை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

அது மலிவு விலையில் இருப்பதை உறுதி செய்வோம். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தொழில்துறை கவனம் செலுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

சிறப்புக் கட்டுரை : 2ஜி இழப்பு என்றால் 5ஜியில் நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *