கடந்த 2018 முதல் 2020 வரையிலான மூன்றாண்டுகளில் குண்டும் குழியுமான சாலைகளால் ஏற்பட்ட விபத்துகளில் மொத்தம் 5,626 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசின் சமீபத்திய புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டு 2,015 பேர், 2019ஆம் ஆண்டு 2,140 பேர், 2020ஆம் ஆண்டு 1,471 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.
ஆட்டோமொபைல் வடிவமைப்பு, அதிக வேகம், மொபைல்போன் பயன்படுத்துவதால், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக சுமை ஏற்றப்பட்ட வாகனம், வாகனத்தின் நிலை, மோசமான வெளிச்சம், முந்தி செல்வது,
பொதுப்பணித் துறையின் கவனக் குறைவு, வானிலை, ஓட்டுநரின் தவறு, தவறான பக்கத்தில் (திசையில்) வாகனம் ஓட்டுவது, சாலையின் குறைபாடு, மோட்டார் வாகனத்தின் குறைபாடு, சைக்கிள் ஓட்டுபவர்களின் தவறு, பாதசாரிகளின் தவறு போன்றவை இந்த விபத்துகளுக்கான காரணங்களாகும்.
இந்த நிலையில் பாதுகாப்பான சாலை பயணத்துக்குப் பல்வேறு உத்திகளை அரசு முன்னெடுத்துள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அதிகம் ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு,
அதைச் சீர் செய்ய முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், சாலை வடிவமைப்பு திட்டமிடலின்போதே சாலை பாதுகாப்பு அதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-ராஜ்
திண்டிவனம் : அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து – வீடியோ!