காசா நகரின் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 500 பேர் கொல்லப்பட்டிருப்பது உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அதிகாலை ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் ராக்கெட் தாக்குதலை நடத்தினார்கள்.
இதற்கு பதிலடி தருவதாக சொல்லி ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரில் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல்.
இதன் உச்சகட்டமாக காசா நகரில் இருக்கும் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அங்கே ஏற்கனவே வெடிகுண்டு தாக்குதலால் சிகிச்சை பெற்று வந்த 500 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலில் இந்த தாக்குதல் ஐநா உட்பட உலக சமுதாயத்தை கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
காசாவின் சுகாதாரத்துறை இந்திய நேரப்படி இன்று (அக்டோபர் 18) காலை வெளியிட்ட தகவலின் படி Al-Ahli Baptist மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால் அந்த மருத்துவமனை கடுமையாக தாக்கப்பட்டது. அங்கே சிகிச்சை பெற்று வரும் பெண்கள் குழந்தைகள் உட்பட 500 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் அதற்கு அருகில் உள்ள ஐநா நடத்தி வரும் அகதிகளுக்கான பள்ளியும் இஸ்ரேலால் தாக்கப்பட்டது.
ஏற்கனவே காசா நகரை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு கெடு விதித்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல் ராணுவம்.
இந்த நிலையில் காசா நகரின் மருத்துவமனை மற்றும் ஐநா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை சவுதி அரேபியா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஜோர்டான் நாடு, அமெரிக்க அதிபருடனான தனது சந்திப்பை ரத்து செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
‘ஜெய் ஸ்ரீ ராம்’ சர்ச்சை: பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு!
KH234 அப்டேட் : கமல் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ரெடி!