காய்ச்சல், சளி பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 50 மருந்துகள் தரமற்றவையாக உள்ளன என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகமெங்கும் வெவ்வேறு நோய்கள் உருவாகி வரும் நிலையில், அதற்கான மருத்துவத் தேவைகளும் அதிகரித்து வருகின்றன.
இதனால் மருத்துவ சந்தையில் தரமற்ற மருந்துகள் வியாபாரம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, காய்ச்சல், சளி பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் தரமற்றவையாக உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து -மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
அந்தவகையில், கடந்த மாதத்தில் மட்டும் 1,280 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில் காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 50 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டது.
அவற்றில் பெரும்பாலானவை இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், பீகாா் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தன்னுடைய (cdsco.gov.in) இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
விஜய் ஹசாரா தொடர்: 5 சதமடித்து அசத்திய தமிழக வீரர்!
மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு: விசாரிக்கிறது கோவை தனிப்படை!