5 ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஜெயில்: சுடச்சுட பூரி,அல்வா ! எங்கே தெரியுமா?

இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஃபதேகர் மாவட்ட சிறைச்சாலைக்கு ‘ஐந்து நட்சத்திர அந்தஸ்து’ அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள 1,100க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் சுவையாக மாற்றப்பட்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) “ஐந்து நட்சத்திர” மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

FSSAI சிறைச்சாலைக்கு அளித்துள்ள சான்றிதழில், “இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களின்படி,

ஃபதேகர் மாவட்ட சிறைச்சாலைக்கு , ஃபரூக்காபாத் உணவு உரிமை வளாகம்’ எனச் சான்றளிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 Star Jail

மேலும் 5 நட்சத்திர மதிப்பீடு மற்றும் சான்றிதழில் ‘சிறந்தது’ என்று எழுதப்பட்டுள்ளது, இது ஆகஸ்ட் 18, 2024 வரை செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது.

5 Star Jail

இது குறித்து ஃபதேகர் மாவட்ட சிறையின் ஜெயிலர் அகிலேஷ் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,

“ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான உணவுகள் கைதிகளுக்கு வழங்கப்படுகின்றன. பருப்பு வகைகளில், அர்ஹர், மசூர், சனா மற்றும் உளுந்து ஆகியவை கைதிகளுக்கு சுழற்சி அடிப்படையில் வழங்கப்படுகின்றன,” என்று கூறினார்.

“காலை உணவாக, இரண்டு நாட்களுக்கு சனா வழங்கப்படுகிறது, இரண்டு நாட்களுக்கு பாவ்-ரொட்டி வழங்கப்படுகிறது, 3 நா ட்களுக்கு தாலியா (கஞ்சி) வழங்கப்படுகிறது,” என்றும் வெவ்வேறு வகையான பருப்பு வகைகள் பரிமாறப்படுகின்றன என்றும்

5 Star Jail

“ஞாயிற்றுக்கிழமைகளைப் பொறுத்தவரை, முதல், மூன்றாவது மற்றும் கடைசி நாட்களில் மாலை பூரி, சப்ஜி மற்றும் அல்வா வழங்கப்படுகிறது, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, கதி-சாவல் வழங்கப்படுகிறது,” என்றும் கூறினார்.

“உணவு தயாரிக்கும் கைதிகள், பல்வேறு உணவகங்களில் காணப்படுவது போல் சுகாதாரமான நிலையில் ஏப்ரன் அணிந்து உணவை சமைக்கிறார்கள்.

உணவு சமைப்பவர்களின் நகம் மற்றும் முடி வெட்டப்படுவதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சிவசங்கர் பாபா to சிவமூர்த்தி: எஸ்கேப் ஆகும் சாமியார்கள்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *