மகத்தான சாதனையாக இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக்கொடி செல்பி படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன என்று ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரத்தின் 76வது ஆண்டைத் தொடங்கும் வேளையில், விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்னும் 75 வார கவுன்ட் டவுன் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தொடரியக்கம் இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்துடன் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
“இந்த இயக்கத்தில் https://harghartiranga.com என்ற இணைய பக்கத்தில் தேசியக் கொடிகளுடன் தங்களது படத்தைப் பதிவு செய்யும் வசதி உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதன் படி இந்த தளத்தில் விஐபிகள் முதல் ஒவ்வொரு இந்தியரும் தேசியக் கொடியோடு தங்கள் செஃல்பியை பதிவிட்டனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அனுபம் கேர், சச்சின் டெண்டுல்கர், ரோஹித் ஷர்மா உள்ளிட்ட ஏராளமானோர் இந்த தளத்தில் தேசியக் கொடியுடன் தங்கள் படத்தைப் பதிவிட்டனர். இந்த வகையில் இன்று இரவு 9 மணி வரையில் 5 கோடியே 58 லட்சத்து 96 ஆயிரத்து 577 செல்ஃபிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
“இது இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும்” என்று குறிப்பிட்டுள்ள கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, கடமை உணர்வு கொண்ட இந்தியர்களின் நாடு முதலில் என்ற கூட்டு முயற்சியை இது பிரதிபலிப்பதாக கூறியுள்ளார்.
வேந்தன்
10 நாட்களில் 1 கோடி தேசியக்கொடி விற்பனை!