4வது சுவிஸ் பட்டியல்:  முதலீடு செய்துள்ள இந்தியர்கள் யார்?

இந்தியா

சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் 4ஆவது பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.

தானியங்கி தகவல் பரிமாற்றத்தின்(AEOI) ஒரு பகுதியாக, 101 நாடுகளின் 34 லட்சம் நிதிக் கணக்குகளின் விவரங்கள் தற்போது பகிரப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தனிநபர் மற்றும் கார்ப்பரேட்கள் மற்றும் அறக்கட்டளைகளுடன் தொடர்புடைய பல கணக்குகள்,

நிறுவனங்களின் வங்கிக் கணக்கு விவரங்களின் நான்காவது பட்டியலை சுவிஸ் வங்கி அதிகாரிகள் இன்று(அக்டோபர் 10) வெளியிட்டுள்ளனர்.

74 நாடுகளுடன் பரஸ்பரமாக இருந்தபோதிலும், ரஷ்யா உட்பட 27 நாடுகளின்  எந்த தகவலையும் வழங்கவில்லை,

அந்த நாடுகள் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தகவல்களை வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியான பட்டியலின்படி, அல்பேனியா, புருனே தருசலாம், நைஜீரியா, பெரு மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் புதிதாக இணைந்துள்ளன.

மேலும் நிதிக் கணக்குகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் அதிகரித்துள்ளது.

பரிமாறப்பட்ட விவரங்களில் பெயர், முகவரி, வசிக்கும் நாடு மற்றும் வரி அடையாள எண், கணக்கு இருப்பு மற்றும் மூலதன வருமானம் பற்றிய தகவல்களும் அடங்கும்.

இந்த ஆண்டு இதுவரை 100க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் மற்றும் நிறுவனங்களின் தகவல்களை சுவிஸ் அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக இந்த எண்ணிக்கை ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே உள்ளது.

இந்தத் தகவல் கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்திருப்பவர்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது வழக்குத் தொடர இந்தத் தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே வங்கிக்கணக்குகள் குறித்த தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும் நடைமுறை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விரிவான தகவல்கள் இந்திய வரி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கலை.ரா

கூட்டணி மற்றும் பிற தலைவர்களுக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

அப்பா இல்லாத இடத்தில்… கனிமொழிக்கு ஸ்டாலின் உருக்கமான பதில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *