49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (பிப்ரவரி 18) டெல்லியில் நடைபெறுகிறது.
பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு 7 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் வரி செலுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு நடுத்தர மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பான் மசாலா மற்றும் குட்கா வணிகத்தில் வரி ஏய்ப்பைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்திய பொருட்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் வகையில் ஏற்றுமதியாளர்களுக்கு வரி குறைக்க வாய்ப்புள்ளது.
சிமெண்ட் மீதான 28 சதவிகித ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
ஜிஎஸ்டி கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ள உள்ளார்.
செல்வம்
ரேஷன் பொருட்கள் பதுக்கல்: புகார் எண் அறிவிப்பு!
மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!