பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக லாகூர், பைசலாபாத் மற்றும் குஜ்ரன்வாலா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பல பெட்ரோல் நிலையங்கள் சில மாதங்களுக்கு முன்பாக மூடப்பட்டன. திறந்திருக்கும் ஒரு சில பெட்ரோல் நிலையங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு எரிபொருள் நிரப்புவது ஒரு லிட்டர் ஆகவும், நான்கு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு ஐந்து லிட்டர் ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், எரிபொருள் கிடைக்காததால் 48 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது.
தினசரி விமானங்களுக்கான குறைந்த எரிபொருள் விநியோகம் மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சில விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்
எப்போதும் இந்த 10 வீட்டு அழகுக் குறிப்புகளை மறந்துடாதிங்க:
கிச்சன் கீர்த்தனா: அத்திக்காய் பொரியல்
லியோ… லியோ… அய்யோ: அப்டேட் குமாரு
செந்தில் பாலாஜி வெளியே வருவாரா? நாளை தீர்ப்பு!