கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில், 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
தங்கள் நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸூக்கு தனது போர் விமானங்கள் மூலம் பதிலடி கொடுக்க ஆரம்பித்த இஸ்ரேல், காசாவில் உள்ள கட்டிடங்களை எல்லாம் தரை மட்டமாக்கி வருகிறது.
கடந்த 16 ஆண்டுகால ஹமாஸ் ஆட்சியில் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பில் மெல்ல மெல்ல முன்னேறி வந்த காசாவின் பெரும்பகுதியை, மீண்டும் எழவே முடியாத வகையில் அழித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். கடந்த 365 நாட்களில் இது வரை காசாவில் 42 ஆயிரம் பேர் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலால் காசாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்த சுமார் 23 லட்சம் மக்களில் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துவிட்டனர். அப்பகுதிகள் அனைத்தும் கைவிடப்பட்ட பகுதிகளாக காட்சியளிக்கின்றன. வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்த தெற்கு மற்றும் வடக்கு காசாவை இணைக்கும் நெடுஞ்சாலை, சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டது.
இதற்கிடையே லெபனானை மையமாக கொண்டு இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, பெய்ரூட் நகரத்தையும் இஸ்ரேல் சல்லடையாக்கி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரால்லா முதலில் கொல்லப்பட்டார்.
தொடர்ந்து, அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டவரையும் இஸ்ரேல் ஏர்ஸ்ட்ரைக் நடத்தி கொன்று விட்டது. ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் நாடும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி போர் மேகம் சூழ்ந்து காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… அஜித் ஷாலினியின் வைரைல் வீடியோ!
வாரத்தின் முதல் நாளன்று குறைந்த தங்கம் விலை!