இந்தியாவில் யூடியூப் மற்றும் பேஸ்புக் வழியாக 40.6 லட்சம் பேர் பணம் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூகவலைத்தளங்களில் பணம் சம்பாதிப்பவர்கள் பற்றிய ஆய்வு இந்தியாவில் நடத்தப்பட்டுள்ளது. இன்ஃபுளுயன்ஸர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் ஒரு லட்சத்துக்கு மேல் சப்ஸ்கிரைபர்கள் வைத்திருந்தால் மாதம் 20 ஆயிரம் முதல் 2.5 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்
better parent – ஆக இருப்பதாக எப்படி என்று சோசியல் மீடியாவில் அறிவுரை கூறுபவர்கள் மட்டும் இந்தியாவில் 3.62 லட்சம் பேர் உள்ளனர். அது போல், டிராவலிங் விலாக்கர்ஸ், பேமிலி விலாக்கர்ஸ் எண்ணிக்கையும் 213 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இவர்களின் வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கைளை வைத்து விளம்பரம் திரையிடப்படுகிறது. அதனடிப்படையில், இவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது.
சில பெரிய நிறுவனங்கள் யூடியூப்பர்களை அணுகி தங்கள் தயாரிப்புகள் பற்றி பேச வைக்கின்றனர். அப்படியும் இவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது.
உதாரணத்துக்கு நம்ம ப்ளுசட்டை மாறன் கூட விமர்சனத்துக்கு முன் விளம்பரங்கள் பற்றி பேசுகிறார் அல்லவா? இதற்கு தனியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடத்தில் இருந்து பணம் பெற்றுக் கொள்கிறார்கள்.
அதே போல, டிராவல் விலாக்கர்களை டிராவல்ஸ் நிறுவனங்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்கின்றன. அங்கு, அவர்களை வீடியோ வெளியிட வைத்து விளம்பரம் செய்கின்றன. இதற்கு, தனியாக பணம் பெற்றுக் கொள்கிறார்கள்.
KL-Bro என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் பிஜூ என்பவர்தான் இந்தியாவில் முதன் முதலில் 5 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற தனி நபர் ஆவார். தற்போது, பிஜூவுக்கு 6 கோடியே 70 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு 9.6 லட்சம் இன்ஃபுளுயன்ஸர்கள் இந்தியாவில் இருந்தனர். 3 ஆண்டுகளில் அது 40.6 லட்சமாக உயர்ந்துள்ளது.