தாறுமாறாக ஓடிய லாரி… சாலை தடுப்பில் தூங்கிய 4 பேர் பலி!

இந்தியா

வடகிழக்கு டெல்லி சீமாபுரி பகுதியில் தாறுமாறாக வந்த லாரி சாலை நடுவே உள்ள தடுப்பு (Road Divider) மேல் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதிகாலை 1.51 மணியளவில் சீமாபுரி பகுதியில் உள்ள டெல்லி போக்குவரத்துக் கழக (டிடிசி) பஸ் டிப்போ அருகே நடந்த இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தது கரீம் (51), சோட் கான் (25), ஷா ஆலம் (38), மற்றும் ராகு (45) ஆகியோர் என்பது தெரியவந்தது.

சம்பவத்தின்போது படுகாயமடைந்த 7 பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது போகும் வழியிலேயே ஒருவர் இறந்துவிட்டதாகவும், மற்றொருவர் சிகிச்சையின் போது இறந்தார் என்றும் துணை போலீஸ் கமிஷனர் ஆர் சத்தியசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரியுடன் நிற்காமல் தப்பிச் சென்ற ஓட்டுநரை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் டெல்லி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

நள்ளிரவில் நடந்த கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

பொதுச்செயலாளர் பதவி : கையெழுத்து வாங்கும் எடப்பாடி

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *