இந்திய பிரதமர் மோடியும் , ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸும் சிட்னியில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் இன்று(மே23) கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மோடி , இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவை காமன்வெல்த், கிரிக்கெட், கறி(Curry) என்ற மூன்று ‘c’-க்களும், Democracy (மக்களாட்சி), Diaspora (புலம்பெயர்ந்தோர்), Dosti (நட்பு) ஆகிய 3Dக்களும் வரையறுப்பதாக கூறினார். Energy (எரிசக்தி), Economy (பொருளாதாரம்), Education (கல்வி) ஆகிய மூன்று ‘E’-க்களும் C, D உறவை தாண்டியது என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த உறவின் வலுவான மற்றும் மிகப்பெரிய அடித்தளம் உண்மையில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை.
இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் புலம்பெயர்ந்த இந்தியர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே புவியியல் தூரம் உள்ளது, ஆனால் இந்திய பெருங்கடல் நம்மை இணைக்கிறது என்றார்.
இரு நாடுகளிலும் எவ்வளவு வித்தியாசமான வாழ்க்கை முறைகள் இருந்தாலும், யோகா நம்மை இணைக்கிறது. கிரிக்கெட் என்பது நம்மை பல ஆண்டுகளாக இணைக்கிறது.
இப்போது டென்னிஸ் மற்றும் திரைப்படங்கள் மற்ற இணைப்புப் பாலங்களாக உள்ளன என்ற பிரதமர், கிரிக்கெட் மைதானத்தில் போட்டி எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அவ்வளவு ஆழமான எங்கள் நட்பு மைதானத்திற்கு வெளியே உள்ளது என்றார்.
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் இறந்தபோது, லட்சக்கணக்கான இந்தியர்கள் வருத்தமடைந்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் ஹாரிஸ் பூங்காவில் உள்ள ஜெய்ப்பூர் ஸ்வீட்ஸின் சாட் உணவு மற்றும் ஜிலேபி மிகவும் சுவையாக இருக்கும் என நான் கேள்விப்பட்டேன். நீங்கள் அனைவரும் எனது நண்பரான ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸை அங்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிஜிட்டல் திண்ணை: சென்னையில் அமித் ஷா மகன்… சந்திக்கும் சபரீசன் நண்பர்கள்!
மோடி தான் ‘பாஸ்’: ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ்