உக்ரைன் போர்: ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையினர் 30,000 பேர் மரணம்!

இந்தியா

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போர் 361-வது நாளை எட்டி உள்ள நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையைச் சேர்ந்த 30,000 பேர் மரணம் அடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாக்னர் குழு என்பது ரஷ்ய நாட்டின் ஆதரவு பெற்ற தனியார் ராணுவ அமைப்பாகும்.

இது கூலிப்படைகளின் வலையமைப்பு அல்லது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உண்மையான தனியார் ராணுவம் எனப் பலவிதமாக அழைக்கப்படுகிறது.

இந்தக் குழு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வணிகரான யெவ்ஜெனி ப்ரிகோஜின் இந்தக் குழுவுக்குச் சொந்தமானதாக அல்லது நிதியளிக்கப்பட்டதாகப் பரவலாக நம்பப்படுகிறது.  

இந்த நிலையில், கீவ் நகரில் இருந்து 274 கி.மீ. தொலைவில் உள்ள மெல்னைட்ஸ்கி நகரில் நேற்று இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்தன. இதனால், மின்சார கட்டமைப்பில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் நோக்கில் அதிகாரிகள் மின் சப்ளையை குறைத்தனர்.

கடந்த அக்டோபரில் இருந்து உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பு பகுதிகளை இலக்காக கொண்டு அடுக்கடுக்காக ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. 

பாக்முத் நகரின் கிழக்கே போர் தீவிரமடைந்து உள்ள நிலையில், கூடுதல் ஆயுதங்கள் தேவை என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என முனிச் மாநாட்டின் ஒரு பகுதியாக பேசும்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

இதேபோன்று, பாக்முத் பகுதியில் போரில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஷ்யா, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க முற்படுகின்றன என குற்றச்சாட்டு கூறியது. சில நாட்களுக்கு முன் போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது. 

எனினும், அமெரிக்கா கூறும்போது, ரஷ்யாவின் கூலிப்படை நிறுவனம் என கூறப்படும் வாக்னர் குழுவைச் சேர்ந்த 30,000 பேர் போரில் மரணம் அடைந்துள்ளனர்.

டிசம்பரில் இருந்து உக்ரைனில் போரில் உயிரிழந்த வாக்னர் வீரர்களில் 90 சதவிகிதம் பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட நபர்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: தினமும் அசைவ உணவுகள் சாப்பிடுவது நல்லதா?

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *